மன்னாரில் யுத்த காலப்பகுதியில் மூடப்பட்ட வீதி-மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க நடவடிக்கை.!
மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகே நீண்ட காலமாக மூடப்பட்டு மக்கள் பாவனைக்கு வந்தில்லை. 1983–1984 ஆண்டு வரை மக்கள் பயன்பாட்டில் இருந்த இந்த வீதி, கடந்த பல ஆண்டுகளாக பயன்பாடற்ற நிலையில் இருந்தது.
மூடப்பட்ட காலப்பகுதியில் இராணுவ சோதனை சாவடி மற்றும் பல்வேறு இராணுவ அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. பின்னர், நீதிமன்ற கட்டுப் பாதுகாப்பு பொருட்கள் அங்குச் சேமிக்கப்பட்ட நிலையில் வீதி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது இல்லை.இப்போது, மன்னார் நகர சபை அந்த வீதியையும் சூழ்ந்த பகுதிகளையும் சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
