உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

தேசிய மகளிர் ஆணைக்குழு முதல் தலைவர் டாக்டர் ரமணி ஜயசுந்தர பதவி விலகல்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
24 பார்வைகள்

கொழும்பு – தேசிய மகளிர் ஆணைக்குழுவின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த டாக்டர் ரமணி ஜயசுந்தர, இன்று (28.01.2026) தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பதவியேற்று நான்கு மாதங்களுக்குள், ஆணைக்குழுவை செயற்படுத்துவதற்கு அரசாங்கத்திடமிருந்து போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்பதையே தனது இராஜினாமாவுக்கான பிரதான காரணமாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதனையடுத்து, டாக்டர் ரமணி ஜயசுந்தர தனது இராஜினாமா கடிதத்தை நேற்று (27.01.2026) ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளார்.2024 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த பெண்களுக்கு அதிகாரமளித்தல் சட்டத்தின் கீழ் இந்த தேசிய மகளிர் ஆணைக்குழு நிறுவப்பட்டதுடன், இது இலங்கையில் பெண்களுக்கான முதல் சட்டபூர்வமான ஆணைக்குழுவாகும்.

2025 செப்டம்பர் மாதம் டாக்டர் ரமணி ஜயசுந்தர தலைவராக நியமிக்கப்பட்டதிலிருந்து, ஆணைக்குழுவிற்கு தேவையான நிதி ஒதுக்கீடு, சுயாதீனமான அலுவலக வசதிகள் மற்றும் தேவையான ஊழியர்கள் ஆகியவை வழங்கப்படாமல் அரசாங்கம் தவறிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பெண்கள் அதிகாரமளித்தல் தொடர்பான தேசிய கொள்கைகளை உருவாக்கி செயல்படுத்துவதும், பெண்களின் உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதும் இந்த ஆணைக்குழுவின் பிரதான பணிகளாகும். இவ்வாறான முக்கிய பொறுப்புகள் இருந்தும், தேவையான ஆதரவு இல்லாத காரணத்தால் ஆணைக்குழு செயலற்ற நிலையில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில், தேசிய மகளிர் ஆணைக்குழுவின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

43 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

53 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

42 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

60 0 0