உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

வடக்கு மாகாண பொதுச் சேவையில் உள்ள வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
26 பார்வைகள்

வடக்கு மாகாண பொதுச் சேவையில் காணப்படுகின்ற தொழில்நுட்பத் துறை சார்ந்த பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆ.சிறியினால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இப்பதவி வெற்றிடங்கள் திறந்த போட்டிப் பரீட்சை மூலம் நிரப்பப்படவுள்ளன.

விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள பதவிகள் விவரம் வருமாறு:
மாகாண தொழில்நுட்பவியல் சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் – குடிசார் (Technical Officer – Civil) தரம் III அல்லது பயிற்சித் தரம்.

மாகாண தொழில்நுட்பவியல் சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் – மின்னியல் (Technical Officer – Electrical) தரம் III அல்லது பயிற்சித் தரம்.

மாகாண தொழில்நுட்பவியல் சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் – படவரைஞர் (Technical Officer – Draughtsman) பயிற்சித் தரம்.

இதன் பொருட்டான முழுமையான விளம்பர அறிவித்தல்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களை www.np.gov.lk எனும் மாகாண இணையத்தளத்தில் ‘Exam and Recruitment Advertisement 2026’ எனும் பகுதியின் ஊடாகப் பார்வையிடவும், தரவிறக்கம் செய்யவும் முடியும்.

தகைமையுடைய விண்ணப்பதாரிகள் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை எதிர்வரும் 2026.02.12 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

50 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

39 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

57 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

41 0 0