உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

நம்பிக்கையில்லாப் பிரேரணையை கேலிக்கூத்தாக மாற்றிய எதிர்க்கட்சி.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
21 பார்வைகள்

இலங்கையில் இன்று நம்பிக்கையில்லாப் பிரேரணை என்பதை அரசியல் நகைச்சுவையாக எதிரணி மாற்றியுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் என அறிவித்த எதிரணி, அதனை இன்னும் சபாநாயகரிடம் கையளிக்கவில்லை.

இந்நிலையில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படும் என்று எதிரணி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய ஊடக சந்திப்பின்போது கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,

“முதலில் பிரதமருக்கு எதிரான பிரேரணையை எதிரணியினர் முன்வைக்கட்டும். கையொப்பம் திரட்டி நாடகம் ஆடுவதுடன் நின்றுவிடாது நடவடிக்கையில் இறங்க வேண்டும்.” – என்றார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை உரிய நேரத்தில் கையளிக்கப்படும் என எதிரணி கூறினாலும், கால எல்லை பற்றி கருத்துக் கூற மறுத்து வருகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

50 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

39 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

57 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

41 0 0