உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு :அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
21 பார்வைகள்

வைத்தியர்கள் உட்பட ஒட்டுமொத்த அரச சேவைக்கும் 2026 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட அடிப்படைச் சம்பள அதிகரிப்பிற்காக, அரசாங்கத்திற்கு 220 பில்லியன் ரூபா மேலதிக நிதியைச் செலவிட நேரிட்டுள்ளதாக சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இன்று (27) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.அத்துடன், 2027 ஆம் ஆண்டில் இதற்காக 330 பில்லியன் ரூபா செலவாகும் எனவும் அமைச்சர் வெளிப்படுத்தினார்.

நாங்கள் வைத்தியர்கள் உட்பட நாட்டின் ஒட்டுமொத்த அரச ஊழியர்களுக்கும் இந்த மாதத்திலும் அடிப்படைச் சம்பள அதிகரிப்பை மேற்கொண்டுள்ளோம். இந்த அடிப்படைச் சம்பள அதிகரிப்பிற்காக மாத்திரம் இவ்வருடத்தில் 220 பில்லியன் ரூபா செலவாகின்றது.2025 ஆம் ஆண்டில் 110 பில்லியன் ரூபா செலவானது.

இவ்வருடம் 220 பில்லியன் ரூபா செலவாகின்றது. 2027 இல் 330 பில்லியன் ரூபா செலவாகும். இது மொத்த சம்பளத்திற்குச் செலவாகும் தொகை அல்ல. இந்தச் சம்பள அதிகரிப்பிற்கு மாத்திரமேயாகும். அப்போது இது சம்பளத்துடன் இணைகின்றது.

அந்த அதிகரிக்கப்பட்ட அடிப்படைச் சம்பளம் ஜனவரி மாதத்திலும் அதிகமாகக் கிடைத்தது. அந்த அடிப்படைச் சம்பளத்திற்கு அமைவாக மேலதிக நேரம் (OT) அதிகரிக்கின்றது.ஏனைய மேலதிக நேரக் கொடுப்பனவுகள் அதிகரிக்கின்றன. விடுமுறை தினக் கொடுப்பனவுகள் அதிகரிக்கின்றன. இவற்றை நாட்டின் பொருளாதார நிலைமைக்குச் சார்பாகவே செய்ய முடியும், என்று தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

50 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

39 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

57 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

41 0 0