உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

படு கொ*லை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி தீப்பந்த போராட்டம்..!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
29 பார்வைகள்

படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக நீதியை கோரி, மட்டக்களப்பில் இன்று (27) மாலை தீப்பந்த போராட்டம் நடத்தப்பட்டது.
இது, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூறும் கறுப்பு ஜனவரி நிகழ்வின் பகுதியாக, மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள நினைவுத்தூபி அருகே முன்னெடுக்கப்பட்டது.


மட்டுமொழி ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியாளர் ஒன்றியம், மற்றும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் இணைந்து இதை ஏற்பாடு செய்தனர்.மட்டுமொழி ஊடக அமையத்தின் தலைவர் வா. கிருஷ்ணகுமார் தலைமையில் போராட்டம் தொடங்க, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூரி சுடர் ஏற்றி, 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.


இதனை தொடர்ந்து, நீதியை கோரி தீப்பந்தம் ஏற்றி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்ட இடத்தில் பொலிஸார் மற்றும் புலனாய்வு துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
போராட்டத்தின் போது, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை வழங்குக, கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்ட ஊடகவியாளர் எங்கே?, ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துக என பல கோசங்கள் எழுப்பப்பட்டன.

நாட்டின் உள்ளக பொறிமுறையில் ஊடகவியலாளர்கள் நம்பிக்கையிழந்ததையொட்டி, சர்வதேச நீதிப்பொறிமுறையின் கீழ் இலங்கையில் சம்பவங்களை விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

49 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

39 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

57 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

41 0 0