சற்று முன்னர் பாலர் பாடசாலை அருகே துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்.!
காலி – அம்பலாங்கொடை, கலகொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.கலகொடை சுனாமிவத்த பகுதியில் உள்ள பாலர் பாடசாலைக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேரக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்