உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

தரமற்ற நிலக்கரி விநியோகஸ்தர்களால் ஏற்பட்ட இரண்டு மடங்கு இழப்பு – சம்பிக்க ரணவக்கவ பகிரங்கம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
27 பார்வைகள்

நிலக்கரி கொள்வனவில் மின்சார சபைக்கு சுமார் ரூ.1,400 மில்லியன் அல்லது ரூ.140 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளதாக பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.நிலக்கரி பிரச்சினை குறித்து கொழும்பில் நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பிலே பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு கூறினார்.தொடர்ந்து பேசிய அவர்,

எரிபொருள் டெண்டரில் ரூ.800 மில்லியன் நட்டத்திற்காக அர்ஜுன மற்றும் தம்மிக்க ரணதுங்க சகோதரர்கள் மீது வழக்குத் தொடர்ந்த இலஞ்சம்- ஊழல் ஆணைக்குழு, ஒரே ஒரு கப்பலில் இருந்து இவ்வளவு பாரிய இழப்பை ஏற்படுத்திய எரிசக்தி அமைச்சருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.மேலும் இந்த பாரிய இழப்பை ஈடு செய்வதற்காக அரசாங்கம் குறித்த நிறுவனத்திற்கு அபராதம் விதிக்க தயாராகி வருவதாகவும் கூறினார்.

சர்ச்சைக்குரிய நிலக்கரி கொள்வனவு காரணமாக, இலங்கைக்கு தினமும் சுமார் 2 ஜிகாவோட்-மணிநேர (GWh) மின்சார இழப்பு ஏற்பட்டுள்ளது.இந்த இழப்பானது தரமற்ற நிலக்கரி விநியோகஸ்தரிடமிருந்து அதிகாரிகள் வசூலிக்க எதிர்பார்க்கும் அபராதத் தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

49 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

39 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

57 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

41 0 0