உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

யாழில் சட்டவிரோத மணல் கடத்தல்; இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
30 பார்வைகள்

அனுமதிப் பத்திரமன்றி சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கைது நடவடிக்கையானது இன்றையதினம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் வைத்து சுன்னாகம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஒரு டிப்பர் தப்பித்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மணல் கிளாலி பகுதியில் இருந்து சட்டவிரோதமாக எடுத்து வரப்பட்ட போதே இவ்வாறு கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில் குறித்த மணலானது ஏனைய பொலிஸ் பிரிவுகளான கொடிகாமம், சாவகச்சேரி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளையும் தாண்டி வந்த நிலையிலேயே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

48 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

39 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

56 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

40 0 0