உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

இன்றும் தொடரும் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
22 பார்வைகள்

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் அரச வைத்திய அதிகாரிகள் தொடங்கிய தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் தொடர்கின்றது.

பல பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களைச் செயற்படுத்தத் தவறியமையைக் கண்டித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கடந்த 23 ஆம் திகதி நாடு முழுவதும் 48 மணி நேர தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடங்கியது.

நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு அந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முடிவடைந்தது. அதன் பின்னர் வைத்தியசாலைகளில் தினசரி சிகிச்சைகள் வழக்கம் போல் முன்னெடுக்கப்பட்டன.

இருப்பினும், சுகாதார அதிகாரிகள் எழுத்து பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்ட திட்டங்களை முறையாகச் செயற்படுத்தத் தவறிவிட்டனர் எனக் கூறி, நேற்றுக் காலை 8 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை அரச வைத்திய அதிகாரிகள் மீண்டும் ஆரம்பித்துள்ளது.

இந்தநிலையில் இந்தப் பணிப்புறக்கணிப்பின் ஒரு பகுதியாக வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கு மருந்துகளை வெளியில் உள்ள மருந்தகங்களில் வாங்குமாறு பரிந்துரைத்தல், தேவையான மருத்துவப் பரிசோதனைகளை வெளியில் உள்ள தனியார் ஆய்வகங்களில் மேற்கொள்ளுமாறு நோயாளிகளுக்குப் அறிவுறுத்துதல் போன்ற செயற்பாடுகளிலிருந்து விலகுவதற்கு மருத்துவர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை, மனித உயிர்களுடன் விளையாட வேண்டாம் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய வங்கியின் அனைத்து பணத்தையும் வழங்கினாலும் கூட, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அரசியல் நோக்கங்கள் நிறைவேறாது என்று பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜயமுனி தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

48 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

39 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

56 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

40 0 0