உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கள்வர்களின் ஆட்சிக்கு மீண்டும் இடமில்லை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
26 பார்வைகள்

“கடந்த காலங்களில் நாட்டை நாசமாக்கிய கள்வர் கூட்டம், மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு இடமளிக்கக்கூடாது. அதற்குரிய அனைத்து வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படும்.” – இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசை வீழ்த்துவதற்கு எதிரணிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பணியாற்றி வருகின்றன. சில எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துப் பயணிக்கவுள்ளன என்றும் தெரியவருகின்றது. இவ்வாறான நிலையிலேயே, கள்வர்களின் கூட்டம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற அனுமதிக்கப் போவதில்லை என்று சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டில் தற்போதுள்ள எதிரணிகளின் கூட்டணியானது கள்வர்களின் ஒன்றிணைவாகும். அதனால்தான் ஒருவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுத்தால் மற்றையவர்கள் கொதிக்கின்றனர்.

பழைய அரசியலை முன்னெடுப்பதற்கு எதிரணிகள் முற்படுகின்றன. இதற்கு மக்கள் இடமளிக்கக்கூடாது. மக்களுக்காக அல்லாமல் தமக்காகவே அந்தத் தரப்புகள் அரசியல் நடத்துகின்றன.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

48 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

39 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

56 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

40 0 0