உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

இந்த ஆண்டு இதுவரை இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 155 பேர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
21 பார்வைகள்

2026 ஆம் ஆண்டின் முதல் 25 நாட்களில் இலங்கையில் 1,375 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இந்த வீதி விபத்துக்களுடாக 155 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலாக் காலங்கள் மற்றும் விடுமுறை காலங்களிலேயே அதிகூடிய விபத்துக்கள் பதிவாகுவதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

வேகமாக வாகனம் ஓட்டுதல், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், அடிப்படை போக்குவரத்து விதிகளைப் பின்பற்றத் தவறுதல், வீதிகளின் மோசமான நிலைமைகள் மற்றும் அதிகரித்து வரும் வாகன எண்ணிக்கை உள்ளிட்ட காரணங்களினாலேயே விபத்துக்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விபத்துக்களின் போது, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளே அதிக பாதிப்புக்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வீதி விபத்துக்கள் ஊடாக ஏற்படக்கூடிய உயிரிழப்புகளை தடுப்பதற்கு, போக்குவரத்துச் சட்டங்களை மேலும் கடுமையாக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

48 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

39 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

56 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

40 0 0