உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பெப்ரவரி 4ஆம் திகதி கரிநாள்; வடக்கு, கிழக்கில் போராட்டம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
21 பார்வைகள்

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதியை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போராட்டம் நடத்தத் தீர்மானித்துள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அதற்காகப் பொதுமக்களை அணிதிரட்டி வலுச்சேர்க்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

அதன்படி, மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் நேற்று கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு சென்று, அங்குள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்கள், பொது அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடினர்.

மேலும், எதிர்வரும் சில தினங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள எட்டு மாவட்டங்களுக்கும் சென்று, போராட்டத்துக்கான ஆதரவைத் திரட்டும் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதாக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தமிழர் தேசத்தின் மீது நூற்றாண்டுகளாகச் சூழ்ந்துள்ள பேரினவாதத் தீயிலிருந்து தமிழர் தாயகத்தைப் பாதுகாக்கவும், தலைமுறைகள் தாண்டிய இனத்தின் இருப்பை உறுதிப்படுத்தவும், வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி போராட்டம் நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

0 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

38 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

56 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

40 0 0