உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

போதைப்பொருளுடன் இரண்டு படகுகள் கைப்பற்றல்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
24 பார்வைகள்

தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்திச் சென்றதாக சந்தேகத்தின் பேரில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட இரண்டு பல நாள் மீன்பிடி படகுகளும், 11 சந்தேகநபர்களும் தற்போது திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

பொலிஸார் வழங்கிய தகவலின் அடிப்படையில், கடற்படையினர் நீண்ட தூரப் பயணக் கப்பல்களைப் பயன்படுத்தி இந்த படகுகளைக் கண்டறிய சிறப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த ஒரு படகில் 5 பேரும், மற்றைய படகில் 6 பேரும் இருந்ததாக ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த படகுகளில் சுமார் 270 கிலோகிராம் போதைப்பொருள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மீட்கப்பட்ட போதைப்பொருள் 450 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியாகும்.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இரண்டு படகுகளும் 11 சந்தேக நபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

33 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

54 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

60 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டிற்கு அனைவரும் கை கொடுக்க வேண்டும்.!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும்…

58 0 0