உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் ப‌த‌வி என்ப‌து தொழில் அல்ல‌ அது ம‌க்க‌ள் சேவையாகும்..!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
19 பார்வைகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்தால் பெரும் செல்வந்தர்கள், வர்த்தகர்கள் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினராவார்கள் – சாதாரண பொதுமக்கள் அரசியலில் இருந்து விலக நேரிடும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியிருப்ப‌து ஏற்றுக்கொள்ள‌ முடியாத‌ ஒன்றாகும்.

இவ்வாறு ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் கட்சியின் த‌லைவ‌ர் முஸ்ன‌த் முபாற‌க் தெரிவித்துள்ளார்.

இது விடயமாக தொடர்ந்தும் அவர் குறிப்பிடும் போது,
நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் ப‌த‌வி என்ப‌து தொழில் அல்ல‌, அது ம‌க்க‌ள் சேவையாகும். ம‌க்க‌ள் சேவை செய்வோர் ச‌ம்ப‌ள‌ம் கூட‌ எதிர்பார்க்க‌ கூடாது. இந்த‌ நிலையில் அவ‌ர்க‌ளுக்கு ஓய்வூதிய‌ம் கொடுப்ப‌து ம‌க்க‌ள் மீது ஏற்ப‌டுத்த‌ப்ப‌டும் சுமையாகும்.

இன்றைய‌ தேர்த‌ல் முறைப்ப‌டி பெரும்பாலும் ப‌ண‌க்கார‌ர்க‌ள் அல்ல‌து ப‌ண‌க்கார‌ர்க‌ளின் உத‌வி இல்லாம‌ல் ஒருவ‌ரால் தேர்த‌லில் வெல்ல‌ முடியாது என்ப‌தே ய‌தார்த்த‌ம்.

ஓய்வூதிய‌ம் ர‌த்து செய்ய‌ப்ப‌ட்டால் ப‌ண‌க்கார‌ர்க‌ள் தேர்த‌லில் போட்டியிடுவ‌து குறையும். கார‌ண‌ம் ப‌ண‌ம் உள்ள‌வ‌ன் மேலும் ப‌ண‌ம் சேர்ப்ப‌தைத்தான் விரும்புவான். ஓய்வூதிய‌ ப‌ண‌ம் இல்லையென்றால் ப‌ண‌க்கார‌ன் நாடாளும‌ன்ற‌த்துக்கெல்லாம் போக‌ நினைக்காம‌ல் த‌ன் சொந்த‌ தொழிலை பார்ப்பான்.

இந்த‌ நிலையில் ம‌க்க‌ளுக்கு சேவை செய்ய‌ வேண்டும் என்ற‌ தியாக‌ எண்ண‌ம் கொண்ட‌ சாதார‌ண‌ ம‌க்க‌ள் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ராவ‌த‌ற்கு இட‌முண்டு.

எம்மை பொறுத்த‌வ‌ரை நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளுக்கு மாத‌ ச‌ம்ப‌ள‌ம் கொடுப்ப‌தும் நிறுத்த‌ப்ப‌ட்டு அவ‌ர்க‌ள் நாடாளும‌ன்றுக்கு வ‌ரும் அம‌ர்வுக‌ளுக்கு ம‌ட்டும் கொடுப்ப‌னவு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌ வேண்டும் என்ப‌தே ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌சின் நிலைப்பாடாகும்.

ஆக‌வே நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளின் ஓய்வூதிய‌த்தை நிறுத்த‌ முய‌ற்சிக்கும் இந்த‌ அர‌சாங்க‌த்தின் ந‌ட‌வ‌டிக்கை மிக‌வும் சிற‌ந்த‌தாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

32 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

54 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

58 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டிற்கு அனைவரும் கை கொடுக்க வேண்டும்.!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும்…

56 0 0