உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

யாழ். போதனா வைத்தியசாலையின் சேவைகள் குறித்து நாடாளுமன்ற சுகாதார மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
19 பார்வைகள்

யாழ். போதனா வைத்தியசாலையின் தற்போதைய சேவைகள் மற்றும் எதிர்காலத்தில் விரிவுபடுத்த வேண்டிய சேவைகள் தொடர்பான விடயங்கள், நாடாளுமன்ற சுகாதார மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டன.மேற்படி குழுக் கூட்டம் வைத்தியர் நிஹால் அபேசிங்கேவின் தலைமையில் நேற்று(21.1.2026) நடைபெற்றது.

இதன்போது, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய நிபுணர்கள் மற்றும் யாழ். மருத்துவ பீடாதிபதி குழுவினர் கலந்து கொண்டு, வைத்தியசாலையின் தற்போதைய நிலைமை மற்றும் சேவைகள் குறித்து விரிவாக விளக்கினர்.குறிப்பாக, ஆளணி பற்றாக்குறை காரணமாக வைத்தியசாலை எதிர்நோக்கும் சவால்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இதற்கு தீர்வாக, எதிர்வரும் காலங்களில் தேவையான சுகாதார ஊழியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்பார்வைக் குழு உறுதி அளித்தது.மேலும், வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளிட்ட தற்போதைய ஆளணியை அதிகரிப்பதற்கான அனுமதியைப் பெறுவதற்காக, விரைவில் மேலதிக கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டது.

மேலும், இலங்கையில் உள்ள மூன்று தேசிய வைத்தியசாலைகளுக்கு அடுத்ததாக, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையை நான்காவது தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்துவது குறித்த தீர்மானமும் எடுக்கப்பட்டது.

இதற்காக தேவையான அடிப்படை ஆளணி அதிகரிப்பு மற்றும் சில முக்கிய சேவைகள் விரிவுபடுத்தப்பட்டு, தேசிய வைத்தியசாலையாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.அத்துடன், வைத்தியசாலையில் நிலவும் இடப்பற்றாக்குறை, புதிய விடுதிகள் அமைப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, புதிய பத்து மாடி கட்டிடத் தொகுதியை அமைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டது.இந்த வருடத்தில் வைத்தியசாலையின் சேவைகளுக்கான உபகரணங்கள் கொள்வனவு மற்றும் திருத்தப் பணிகளுக்கான நிதி விடுவிப்பு குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.கூட்டத்தின் இறுதியில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பல்வேறு பிரிவுகள் சிறப்பாக இயங்கி வருகின்றமை பாராட்டப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

93 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

63 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

56 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

57 0 0