நுவரெலியாவில் உறைய வைக்கும் பனி.!
இலங்கையில் இன்று (21.01.2026) அதிகாலையில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை 7.4°C ஆக இருந்ததாக நுவரெலியா வானிலை ஆய்வு நிலையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை பண்டாரவளையில் 11.5°C வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும், பதுளையில் 15.2°C குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.கூடுதலாக, அதிகாலையில் மஹஇலுப்பல்லம பிரதேசத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 17.4°C ஆகவும், அனுராதபுரத்தில் இன்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை 18.6°C ஆகவும் பதிவாகியுள்ளது.