உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பாடசாலைகள் இன்று முதல் மீள ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
21 பார்வைகள்

2026 ஆம் கல்வி ஆண்டின் முதலாம் பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று(21) முதல் ஆரம்பமாகின்றது.அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம், இன்று முதல் எதிர்வரும் பெப்ரவரி 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.முதலாம் பாடசாலைத் தவணையின் முதலாம் கட்டம், ஜனவரி 05 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தது.

இதன் பின்னர், டித்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, ஜனவரி 10 ஆம் திகதி முதல் நேற்று(20) வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் நடைபெறவுள்ளதன் காரணமாக, எதிர்வரும் பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் மார்ச் 02 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.மேலும், ரமழான் பண்டிகையை முன்னிட்டு, முஸ்லிம் பாடசாலைகளுக்கு மாத்திரம் பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் மார்ச் 22 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

59 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

42 0 0