உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

தங்க நகை அணிந்து செல்லும் பெண்களுக்கு எச்சரிக்கை – தமிழ் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
22 பார்வைகள்

கேகாலை – தீவல வீதியின் எவுங்கல்ல பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 7,58,000 ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.கடந்த 17 ஆம் திகதி பதுளையைச் சேர்ந்த 25 வயதுடைய பிள்ளையின் தாயார், ஹெட்டிமுல்லையில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு வந்திருந்த போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நோய்வாய்ப்பட்டிருந்த தனது சகோதரரின் மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் மர்ம நபர் ஒருவரால் இவர் வழிமறிக்கப்பட்டுள்ளார்.எவுங்கல்ல பகுதியில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் வைக்கப்பட்டிருந்த மரப்பலகையை வைத்து வீதியை மறைத்து மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டுள்ளது.

போது, காட்டு பகுதியில் இருந்து வந்த இளைஞன் ஒருவன் நகைகளை பறித்துச் சென்றுள்ளார். இரண்டு பவுண் தங்க சங்கிலி மற்றும் ஒரு பவுண் எடையுள்ள தங்கப் பென்டன் ஆகியவையே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீதி வழியாக வரும் போது முச்சக்கர வண்டி ஒன்றில் வந்த நபர் தன்னைச் சந்தேகத்திற்கிடமான முறையில் முந்திச் சென்றதாக பாதிக்கப்பட்ட பெண் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து கேகாலை பொலிஸார் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

59 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

42 0 0