உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஊக்குவிப்பு தொகையை வழங்கும் புதிய நடைமுறைக்கு அனுமதி.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
24 பார்வைகள்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக 2026 ஆம் ஆண்டு பாதீட்டில் முன்மொழியப்பட்ட நிவாரணங்களை வழங்குவதற்கான புதிய நடைமுறைக்கு அமைச்சரவை தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர்களின் தொழிலுக்கேற்ற நியாயமான வருமானத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தற்போது 1350 ரூபாவாக உள்ள அவர்களின் நாளாந்த ஆகக்குறைந்த வேதனத்தை 1,550 ரூபா வரை அதிகரிக்க வேண்டும் எனவும் தொழிலாளர்களின் நாளாந்த வருகையை ஊக்குவிப்பதற்காக மேலதிகமாக 200 ரூபா ஊக்கத்தொகையாக வழங்குவதற்குமான யோசனை முன்மொழியப்பட்டது.

இதன் மூலம் தொழிலாளர் ஒருவர் நாளொன்றுக்கு மொத்தமாக 1,750 ரூபா வரை வருமானத்தைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி முன்வைத்த இந்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்காக, 2026 ஆம் ஆண்டுக்கான திட்டத்தின் மூலம் 5,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அரசாங்கம் வழங்க உத்தேசித்துள்ள ஊக்கவிப்புக் கொடுப்பனவுகள் இரண்டு கட்டங்களாக வழங்கப்படவுள்ளன.முதலில் 2026 ஜனவரி 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், முதல் 6 மாத காலத்திற்கு அந்தந்த பெருந்தோட்டக் நிறுவனங்கள் ஊடாக இந்த கொடுப்பனவு செலுத்தப்படும்.

அதன் பின்னர், தொடர்புடைய அனைத்துத் தரப்பினருடனும் ஆலோசனைகளை நடத்தி, குறித்த ஊக்குவிப்புக் கொடுப்பனவை நேரடியாகத் தொழிலாளர்களின் தனிப்பட்ட வங்கி கணக்குகளில் வரவு வைப்பதற்கு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு திட்டமிட்டுள்ளது.

தொழில் அமைச்சர் மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஆகியோர் இணைந்து சமர்ப்பித்த இந்த கூட்டு யோசனைக்கு அமைச்சரவை முழுமையான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

59 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

42 0 0