உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மட்டக்களப்பு வீதி அபிவிருத்தியில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன் மொழிவுகளை புறக்கணித்த அனுர அரசு!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
25 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களால் அபிவிருத்தி குழு ஊடாக முன்மொழியப்பட்ட வீதி அபிவிருத்தி தொடர்பான முன் மொழிவுகளில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத் அவர்களின் முன்மொழிவுகளை தவிர ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவுகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என கூறி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் மிகப்பெரிய சர்ச்சை எழுந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வீதி அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் முகமாக  அரசாங்கம் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக ஐந்து கோடி ரூபாய் பெறுமதியான வீதிகளின் பெயர் விபரங்களை மாவட்ட அபிவிருத்தி குழு ஊடாக தருமாறு கோரிக்கை விடுத்திருந்தது.

இன் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன், சாணக்கியன், சிறிநாத், ஹிஸ்புல்லா ஆகியோர் வீதிகளின் பெயர் விபரங்களை அரசாங்க அதிபரின் அனுமதியுடன் அரசாங்கத்திற்கு அனுப்பி இருந்த நிலையில். பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத் அவர்களின் முன் மொழிவுகளை தவிர ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் முன் மொழிவுகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என்பதால் கடந்த மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இது குறித்து சர்ச்சைகள் ஏற்பட்டதோடுபாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியும் இருந்தனர்.

ஏனை அரசாங்கங்களை போல இந்த அரசும் சிறுபான்மை கட்சிகளுக்கிடையே பிரித்தாளும் தந்திரத்தை கையால்கிறதா? தமிழரசுக் கட்சிக்குள் அரசு சார்பில் ஒருவர் இருப்பதாக ஒரு விம்பத்தை உருவாக்கி கட்சிக்குள் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் நோக்கில் அரசாங்கம் இவ்வாறு திட்டமிட்டு செய்கிறதாக என்ற கேள்வி எழுகிறது?இது குறித்து தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

” அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அபிவிருத்தி குழு ஊடாக நாங்களும் மாவட்டத்தில் உள்ள வீதிகளின் பெயர் விபரங்களை சமர்ப்பித்திருந்தோம். ஆனால் எமது முன் மொழிவுகளுக்கு அனுமதி கிடைக்கவில்லை. நான் நினைத்தால் நூற்றுக்கணக்கான வீதிகளை அரசாங்கத்தில் இருந்து பெற முடியும். அவ்வாறு பெற்றால் பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட அரசுக்கு எதிராக வாய் திறக்க முடியாத நிலை உருவாகும். எனவே பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கும் என்று. என தெரிவித்தார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

58 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

42 0 0