உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

திருகோணமலையில் 34 கோயில்கள் சட்டவிரோதமானது:சர்ச்சையை கிளப்பும் சரத் வீரசேகர.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
22 பார்வைகள்

திருகோணமலையில் 34 கோயில்கள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளது.அவற்றை அகற்றுமாறு நீதிமன்றத்தால் மாநகர சபைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர அறிவித்துள்ளார்.

மொட்டுக் கட்சி தலைமையகத்தில் இன்று (20.01.2026) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் திருகோணமலை புத்தர் சிலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தேரர்களின் வழக்கு தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் தொடர்ந்து பேசியதாவது,இப்போதும் எட்டு கோயில்கள் கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் சட்டத்திட்டங்களை மீறி அமைக்கப்பட்டுள்ளன.இவற்றுக்கு கடலலைகளும் அடிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் நாங்கள் இது தொடர்பில் கதைக்கவில்லை.பௌத்தர்களாக நாங்கள் ஒன்றுமையாகத் தான் இருந்தோம்.ஆனால் இவ்வாறு தேரர்களை கைது செய்து பௌத்த மதத்திற்கு தீங்கிழைத்து பேச வைக்கின்றனர்.காலையில் அமைக்கப்பட்ட புத்தர் சிலையை வணங்குவதற்கு இரவு வந்த பௌத்த பிக்குகளை கடலோர பாதுகாப்பு திணைக்கள சட்டத்திட்டங்களை மீறியதாக கைது செய்தது யாரும் ஏற்றுக் கொள்ள முடியாத காரணமாகும்.இது திட்டமிட்டப்பட்ட செயற்பாடாகும் என குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

58 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

42 0 0