உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மலையக மக்களின் காணி உரிமையை ஜி.எஸ்.பி. பிளஸ் நிபந்தனையாக்க வேண்டும் – பிரான்ஸிடம் மனோ கணேசன் கோரிக்கை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
19 பார்வைகள்

மலையக மக்களுக்கான காணி உரிமையை, ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்  சலுகை நிபந்தனையாக வைக்க பிரான்ஸ் முன் வர வேண்டும் என்று அந்நாட்டுத் தூதுவரிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.மனோ எம்.பி. தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி பிரதிநிதிக் குழு, கொழும்பில் உள்ள பிரான்ஸ் தூதுவர் ரெமி லாம்பெர்ட்டை சந்தித்துப் பேச்சு நடத்தியது.

கொழும்பில் உள்ள மனோ கணேசன் எம்.பியின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், த.மு.கூ. பிரமுகர்கள், பேராசிரியர் விஜயசந்திரன், பாரத் அருள்சாமி, புஷ்பநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.இது தொடர்பில் மனோ எம்.பி. தன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு கூறியுள்ளார்.

எனது இல்லத்தில், இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லாம்பர்டைச் சந்தித்து, டித்வா பேரழிவால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தபோதிலும், மலையக தமிழ் மக்களுக்கு — குறிப்பாக தோட்டத் தொழிலாளர்கள் — அரசின் இலங்கை மீள்கட்டெழுப்பல் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் திட்டமிட்ட முறையில் விலக்கி வைக்கப்படுகிறார்கள் என்பதைத் தூதுருக்கு உண்மை ஆதாரங்களுடன் எடுத்துரைத்தோம்.

அரசின் உத்தியோகபூர்வ உறுதிமொழிகள் இருந்தபோதிலும், இடம்பெயர்ந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட வேண்டிய ரூ. 5 மில்லியன் நிதியுதவியும், காணி ஒதுக்கீடும், பெருந்தோட்ட சமூகத்திற்கு மறுக்கப்பட்டுவருகிறது. இது கவனயீனம் அல்ல. இது திட்டமிட்ட பாகுபாடு ஆகும்.

மலையக சமூகத்துக்கே உரிய, இன்னும் தீர்க்கப்படாத அநீதிகள் குறித்து விவாதிக்க, தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் சிவில் அமைப்புகள் சார்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்திக்கப் பல தடவைகள் கோரிய போதும், அந்தக் கோரிக்கைகள் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பாகுபாட்டு நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மலையக இலங்கை மக்களுக்கு சம உரிமை, சம வளங்கள், சம மரியாதை உறுதி செய்யவும், இலங்கை அரசுடன் கூடிய தனது நல்லுறவுகளை, பிரான்ஸ் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினோம்.

மேலும், முன்னணி ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாகிய பிரான்ஸ், மலையக தமிழ்ச் சமூகத்தின் காணி, வீட்டு உரிமைகள், இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தால், வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்  சலுகைகளுக்கான நிபந்தனைகளாக முன்வைக்கப்பட வேண்டும் என வலியுறுத்த வேண்டும் என்றும் நாம் கோரிக்கை விடுத்தோம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

58 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

42 0 0