உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

“எங்களைச் சந்திக்க நேரமில்லையா?” – ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பிய யாழ். மக்கள்..!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
16 பார்வைகள்

யாழ்ப்பாணம் மாவட்ட வீட்டுத் திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக இன்று கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. “யாழ். வந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வீதியில் சுதந்திரமாக நடந்து திரிந்தார்.ஆனால், வீடுகள் இல்லாமல் அரைகுறை வீடுகளில் தங்கியுள்ள எங்களைச் சந்திப்பதற்கு அவருக்கு நேரம் கிடைக்கவில்லையா?” என்று போராட்டக்காரர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர்.அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“தற்போதைய ஆளுநரான நா.வேதநாயகன், 2019ஆம் ஆண்டு யாழ். மாவட்ட செயலராகக் கடமையாற்றிய காலத்தில் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கான கொடுப்பனவுகள் இன்றுவரை வழங்கப்படவில்லை

இதனால் அந்தக் காலப் பகுதியில் வீட்டுத் திட்டங்களைப் பெற்ற பயனாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமது அன்றாட வாழ்க்கையை நடத்தி வரும் நிலையில், மழைக் காலங்களில் இருக்க இடம் இல்லாமல் அல்லல்படும் நிலைமை பல வருடங்களாகத்  தொடர்கின்றன.

தற்போதைய அரசு பாரபட்சமற்ற அரசு எனக் கூறி ஆட்சிக்கு வந்த பின்னர், கடந்த ஆட்சியாளர்களிடம் பெற்ற வீட்டுத் திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்காமல் தங்களது ஆட்சியில் புதிய வீட்டு திட்டங்களுக்கான கொடுப்பனவை வழங்குகின்றார்கள்.இந்தச் செயற்பாடு பாதிக்கப்பட்ட எமக்கு மிகவும் மன வேதனையைத்  தருவதோடு தற்போதைய ஆளுநர் கூட இது தொடர்பில் மௌனமாக இருப்பது நமக்கு மிகுந்த மன வருத்தத்தைத் தருகின்றது.

யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வீதியில் சுதந்திரமாக நடந்து திரிந்தார். ஆனால், யாழ். மாவட்டத்தில் வீடுகள் இல்லாமல் அரைகுறை வீடுகளில் தங்கியுள்ள எங்களைச் சந்திப்பதற்கு அவருக்கு நேரம் கிடைக்கவில்லை.

ஆகவே, எமது பிரச்சினை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநருக்கு மீண்டும் தெரியப்படுத்தியுள்ளோம். எமது பிரச்சினையை விரைந்து தீர்க்காவிடின் எமது போராட்டம் தொடரும்.” – என்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

58 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

42 0 0