உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கல்விச் சீர்திருத்தச் சிக்கலைதீர்க்கும் நடவடிக்கை துரிதம் – அமைச்சர் நளிந்த தெரிவிப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
21 பார்வைகள்

புதிய கல்விச் சீர்திருத்தங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்த்து மாணவர்களுக்குச் சிறந்த கல்வியை வழங்கும் நடவடிக்கைள் துரிதப்படுத்துள்ளன என்று  சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“கல்வி சீர்திருத்தங்கள் நீண்ட காலமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனால் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த எமது அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தரம் 6 பாடநூலில் ஏற்பட்ட ஒரு சிறு தவறால் அதை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எனினும் அந்த தவறுகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சிகள் கூறுவதைப் போன்று வேறு எந்தவொரு தவறான விடயங்களும் பாடநூலில் உள்ளடக்கப்படவில்லை. அதை நன்கு அறிந்த தரப்பினரால் இந்த சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 ஜனாதிபதியிடம் கடிதம் மூலமும் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.தவறுகள் காணப்படுமாயின் அவற்றை திருத்திக் கொண்டு கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த நாம் தயாராகவுள்ளோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

57 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

42 0 0