உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மஹிந்தானந்த, நளின் பெர்னாண்டோ ஆகியோரின் மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
17 பார்வைகள்

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்ணான்டோ ஆகியோர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களை மார்ச் 09ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று(20) தீர்மானித்துள்ளது.

தங்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தண்டனைக்கு எதிராக இவர்கள் இருவரும் மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த மேன்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதன்போது, முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த அமர்வு, மேன்முறையீட்டு மனுக்களை மார்ச் 09ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க உத்தரவிட்டது.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது லங்கா சதொச நிறுவனத்தின் ஊடாக 14 ஆயிரம் கரம்போடுகள் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 50 மில்லியன் ரூபாய்க்கும் மேலாக இழப்பு ஏற்படுத்தியதாக தெரிவித்து மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது.

விசாரணைகளின் முடிவில் இருவரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட நிலையில், மகிந்தானந்தவுக்கு 20 ஆண்டுகளும், நளின் பெர்ணான்டோவுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

58 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

42 0 0