உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

போதைப்பொருளை ஒழிக்க பொலிஸாரால் விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்கள் தமக்குக் கிடைக்கும் தகவல்களை நேரடியாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு (SSP) வழங்குவதற்கான விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான இரகசியத் தகவல்களை அந்தந்தப் பிரதேசங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு உடனடியாகத் தெரிவிப்பதன் மூலம் குற்றவாளிகளைக் கைது செய்ய பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, பின்வரும் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அந்தந்த மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

மாத்தறை – 071 8591433, கம்பஹா – 071 8591608 , காலி – 071 8591452, எல்பிட்டிய – 071 8591472, தங்காலை – 071 8591488, புத்தளம் – 071-8591289, சிலாபம் – 071 8591304, குளியாப்பிட்டிய – 071 8591260, நிக்கவெரட்டிய – 071 8591274, குருணாகல் – 071 8591244, கண்டி – 071 8591042, தெல்தெனிய – 071 8592274, மாத்தளை – 071 8591079, கம்பளை – 071 8591070, நுவரெலியா – 071 8591094, ஹட்டன் – 071 8591114, இரத்தினபுரி – 071 8591382, கேகாலை – 071 8591410, சீதாவாக்கபுர – 071 8591423, எம்பிலிப்பிட்டிய – 071 8591392, கந்தளாய்- 071 8591187, அம்பாறை – 071 8591145, மட்டக்களப்பு – 071 8591127, திருகோணமலை – 071 8591170, காங்கேசன்துறை – 071 8591315, யாழ்ப்பாணம் – 071 8591327, வவுனியா – 071 8591340, மன்னார் – 071 8591363, கிளிநொச்சி – 071 8591347, முல்லைத்தீவு – 071 8591374, மொனராகலை – 071 8591533, பண்டாரவளை – 071 8591520, பதுளை – 071 8591508, கெப்பித்திகொல்லேவ – 071 8592902, பொலன்னறுவை – 071 8591230, அநுராதபுரம் – 071 8591200, களுத்துறை – 071 8591688, பாணந்துறை – 071 8591674, களனி- 071 8591589, நீர்கொழும்பு – 071 8591626, நுகேகொடை – 071 8591641, கல்கிஸ்ஸை – 071 8591661, கொழும்பு வடக்கு – 071 8591565, கொழும்பு தெற்கு – 071 8591577, கொழும்பு மத்திய – 071 8591551, ஹோமாகம – 071 8592113, தம்புத்தேகம – 071 8591218

தகவல் வழங்குவோரின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் எனவும், போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்க இந்த விசேட பொறிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

52 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

42 0 0