உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்ப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
22 பார்வைகள்

புத்தளம் – உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டிமுனை கிராமத்தில் உள்ள களப்பு பகுதியில் நேற்று இரவு குடும்பஸ்தர் ஒருவர் விஷம் அருந்தி உயிர்மாய்த்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களப்பு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இறால் பண்ணை ஒன்றில் குத்தகை முறையில் தொழில் செய்து வந்த புளிச்சாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த எம்.எம்.ரிஸ்கான் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் நேற்று இரவு தமது இறால் பண்ணைக்குச் சென்று மின்சார விளக்குகளை ஒளிர விட்டு வருவதாக தனது மனைவியிடம் கூறிச் சென்றுள்ளார். அங்கு அவர் விஷத்தை அருந்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இவரின் இறால் பண்ணையானது அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ சூறாவளியால் பாதிப்படைந்து இறால் யாவும் ஆற்றில் சென்றதுடன் பல லட்சம் ரூபாய் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் பெரும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

அவரை உடப்பு பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்ற போதும், அவரின் உயிர் ஏற்கனவே பிரிந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவரின் சடலம் பிரேத பரிசோதணைக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

49 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

22 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

38 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

46 0 0