உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மின்சார சபை ஊழியர்களால் ஜனாதிபதிக்கு கடிதம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
21 பார்வைகள்

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் கீழ், விருப்ப ஓய்வுக்காக விண்ணப்பித்துள்ள 2,200 ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்குத் தலையிடுமாறு கோரி, அவ் ஊழியர்களால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கடிதத்தின் ஊடாக அந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளதாவது:
வழங்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் விருப்ப ஓய்வு பெறுவதற்குத் தாங்கள் தீர்மானித்ததாகவும், அதற்கமைய தங்களின் வருங்கால வாழ்வாதார வழிகளைத் திட்டமிட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், மறுசீரமைப்பு செயல்முறை நாளுக்கு நாள் தாமதமடைந்து வருவதால், தாங்கள் கடும் மன உளைச்சலுக்கும் குழப்பத்திற்கும் ஆளாகியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை மின்சார சபை கலைக்கப்படும் உத்தியோகபூர்வ திகதி அறிவிக்கப்படும் வரை, சபையிலிருந்து விலகித் தங்களது புதிய திட்டங்களைச் செயல்படுத்த முடியாமல் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அத் திகதியை அறிவிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, மின்சக்தி மறுசீரமைப்பு செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் புபுது நிரோஷன் ஹெடிகல்லகே தனது பதவி விலகல் கடிதத்தின் மூலமும் அறிவித்துள்ளதை ஊழியர்கள் அந்தக் கடிதத்தில் நினைவுபடுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

49 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

22 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

38 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

46 0 0