உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

இ.தொ.கா வின் 20 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இந்தியா பயணம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கௌரவ சந்தோஷ் ஜா அவர்களிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் அவர்கள் முன்வைத்த பரிந்துரைக்கு அமைவாக, இ.தொ.காவைச் சேர்ந்த 20 உள்ளூராட்சி மன்ற உப தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இன்று (18) இந்தியா பயணமானார்கள்.

இந்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டில், இம் மாதம் 19ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதி வரை 11 நாட்கள் இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை வலுவூட்டும் விசேட செயலமர்வில் பங்கேற்பதற்காக இக் குழு இந்தியா செல்கிறது.

இச் செயலமர்வில் இலங்கையிலிருந்து நுவரெலியா, பதுளை, மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி இ.தொ.காவைச் சேர்ந்த மொத்தம் 20 உள்ளூராட்சி மன்ற உப தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த செயலமர்வு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் அவர்களின் பரிந்துரையின் கீழ், இந்திய அரசாங்கம் முன்னெடுக்கும் முதலாவது வேலைத்திட்டமாக அமைகிறது.

உள்ளூராட்சி நிர்வாகத் திறன்களை மேம்படுத்துதல், மக்கள் சேவை செயல்திறன் மற்றும் அபிவிருத்தி சார்ந்த நடைமுறை முன்னேற்றம் ஆகியவற்றை வலுப்படுத்தும் நோக்கில் இச் செயலமர்வு நடத்தப்படவுள்ளது.

இச் செயலமர்வில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து 15 உறுப்பினர்களும், பதுளை மாவட்டத்திலிருந்து 3 உறுப்பினர்களும், மாத்தளை மாவட்டத்திலிருந்து ஒரு உறுப்பினரும், கண்டி மாவட்டத்திலிருந்து ஒரு உறுப்பினர் என மொத்தமாக 20 உறுப்பினர்கள் கலந்துக்கொள்கின்றனர்.

முன்னதாக கடந்த ஆண்டு(2025) ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி, நுவரெலியாவில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கௌரவ சந்தோஷ் ஜா அவர்களை சந்தித்த ஜீவன் தொண்டமான் அவர்கள், புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்காக இந்தியாவில் நடைபெறவுள்ள பயிற்சிப் பட்டறையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் 20 உறுப்பினர்களுக்கு பங்கேற்பதற்கான வாய்ப்பை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு உயர்ஸ்தானிகர் கௌரவ சந்தோஷ் ஜா அவர்கள், விரைவில் சாதகமான பதிலை வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.

அந்த உறுதியளிப்பிற்கிணங்க, இப்போது இ.தொ.கா சார்பில் 20 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இந்தப் பயிற்சி செயலமர்வில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

49 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

22 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

38 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

46 0 0