உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

ஈரான் மீது அமெரிக்கா விதித்த வரி; எரிபொருள் விலை உயருமா?

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
24 பார்வைகள்

ஈரானுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகளுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் விதிக்கப்பட்டுள்ள 25 சதவீத வரி விதிப்பு, இலங்கையை நேரடியாகப் பாதிக்காது என்று எரிசக்தி அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போது ஈரானிலிருந்து எரிபொருளை கொள்வனவு செய்யவில்லை. அத்துடன், முறையான விலைமனுக்கோரல் நடைமுறைகளின் கீழ் தற்போது இந்தியா, சிங்கப்பூர் மற்றும் சீனாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களிடமிருந்து இலங்கை எரிபொருள் கொள்வனவு செய்து வருவதாகவும், ஈரானுடன் தனியாக எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமது மொத்த எரிபொருள் தேவையின் 90 வீதத்துக்கு மேற்பட்டதை இறக்குமதி செய்து வருகின்றது.

அத்துடன், ஆண்டுதோறும் எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்படும் தொகை, சுமார் 4 முதல் 5 பில்லியன் அமெரிக்க டொலராக மதிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

48 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

22 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

38 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

45 0 0