உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

தமிழினத்தின் எதிர்காலத்தைக் காப்பாற்ற தமிழ்க் கட்சிகளுக்குள் ஒற்றுமை அவசியம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
27 பார்வைகள்

தமிழினத்தின் இருப்பைப் பாதுகாத்துக்கொள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் ஒற்றுமை தேவை என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தாங்கள் விரும்பியவாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி செயற்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விரும்பினால் அது நடக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சமகால அரசியல் நிலைமை குறித்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பொது விடயங்களிலாவது தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும்.

இதைவிடுத்து தமிழ்த் தேசியக் கட்சிகள் இன்னும் ஏட்டிக்குப் போட்டியாகச் செயற்படுவோமாக இருந்தால் அது பாரதூரமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

தற்போதைய அரச தரப்பினர் கொள்கை ரீதியாக அதிகாரப் பகிர்வுக்கு எதிரானவர்கள்.

இந்த நாட்டில் தேசிய பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமெனில் நிச்சயமாகப் புதிய அரசமைப்பு கொண்டுவரப்பட வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

48 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

22 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

38 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

45 0 0