உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு முன்னுரிமை: வடக்கில் காணி நன்கொடை குறித்து ஜனாதிபதி ஆலோசனை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
24 பார்வைகள்

காணி அற்றவர்களுக்காக வடக்கு மாகாணத்தில் காணி நன்கொடை வழங்கும் நடவடிக்கை தொடர்பில் உரியவாறு பரிசீலிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆலோசனை வழங்கியுள்ளதாக, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவிக்கின்றார்.

மானிடம் – பூமிதான இயக்கத்தின் கோரிக்கை கடிதத்தை, ஜனாதிபதியிடம் சமர்பித்த போதே இந்த ஆலோசனை வழங்கப்பட்டதாக எமது செய்தி சேவைக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

அதற்கமைய, மானிடம் – பூமிதான இயக்கத்தினால் நன்கொடையாக வழங்கப்படவுள்ள காணிகளை நேரில் சென்று பார்வையிட்டதாகவும் அவர் கூறினார்.

குறித்த காணிகள் தொடர்பான ஆரம்பக்கட்ட களஆய்வு மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், அவற்றை காணி அற்றோருக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

முன்னதாக, டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட, காணிகள் அற்றோருக்கு, நன்கொடையாளர்களால் வடக்கு மாகாணத்தில் காணிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மானிடம் – பூமிதான இயக்கம் ஜனாதிபதிக்கு கடிதம் ஊடாக அறிவித்தனர்.

குறித்த காணிகளில் வீடுகளை அமைப்பதற்கான நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும், ஜனாதிபதியின் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தின் போது, குறித்த அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

குறிப்பாக, டிட்வா சூறாவளியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மலையக பெருந்தோட்டங்களை சேர்ந்த மக்களுக்கு முன்னுரிமை வழங்கி, காணிகள் பகிர்ந்தளிக்கப்படும் என மானிடம் – பூமிதான இயக்கம் ஜனாதிபதிக்கு வழங்கிய கோரிக்கை கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

48 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

22 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

38 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

45 0 0