‘இலங்கையை மீள்கட்டியெழுப்பும்’ தேசிய நிதிக்காக மக்கள் வங்கி ஓய்வூதியர் சங்கம் நிதி நன்கொடை..!
‘இலங்கையை மீள்கட்டியெழுப்பும்’ தேசிய நிதிக்காக மக்கள் வங்கி ஓய்வூதியர் சங்கத்தினால் 45 இலட்சம் ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.மக்கள் வங்கி ஓய்வூதியர் சங்கத்தின் 1996ஆம் ஆண்டுக்கு முந்தைய குழுவின் உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அமைப்புகள் இணைந்து இந்த நன்கொடையை வழங்கியுள்ளனர்.
இதற்கான காசோலையை மக்கள் வங்கி ஓய்வூதியர் சங்கத்தின் தலைவர் ரேமன் பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அவர்களிடம், ஜனாதிபதி செயலகத்தில் அண்மையில் கையளித்தார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, மக்கள் வங்கி ஓய்வூதியர் சங்கத்தின் செயலாளர் டி. ஜி. விமலரத்ன, உப தலைவர் ஜே. பி. திலகரத்ன உள்ளிட்ட மாவட்ட பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.