உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

சஜித் ரணில் இணைவுக்கு மத்தியில் தள்ளாடும் உறுப்பினர்கள்!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் ஒன்றிணைவு எனும் போர்வையில் சில தலைவர்கள் எம்.பி.க்களை கவர்ந்திழுக்க முயற்சிப்பதால் குறித்த ஒன்றிணைவு முயற்சி தோல்வியடையும் அபாயத்தில் உள்ளதாகவும் தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டிணைவு ஒப்பந்தம் நேர்மையுடன் மேற்கொள்ளப்படவில்லை என இரு கட்சிகளின் பல ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றதுடன் இதன்போது உறுப்பினர்கள் குழு இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி குறித்து கட்சித் தலைமையிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பியது.

குறித்த கூட்டத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, தனது தலைமையில் இந்தப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளதாக உள்ளக செய்திகள் தெரிவிக்கின்றன.

சில தலைவர்கள் தனியாகச் சென்று வெற்றி பெற முடியும் என நம்பிக்கை கொண்டிருப்பதால், இந்த மனநிலை கூட்டுப் பணி ஏற்பாட்டிற்கு பெரும் தடையாக இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இரு கட்சிகளின் கீழ்மட்ட உறுப்பினர்களில் பெரும்பாலானோர், இரு கட்சிகளும் ஒன்றிணையாமல் இந்த அளவிலான வெற்றியை அடைய முடியாது என மீண்டும் ஒருமுறை கட்சித் தலைமைகளுக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.மேலும், சில தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், மற்றவர்கள் உருவாகி தங்கள் தலைமைப் பதவிகளை இழந்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

46 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

19 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

37 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

44 0 0