லொறியுடன் வேன் மோதி விபத்து: இருவர் படுகாயம்.. சாரதி கைது.!
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில், லொறியும் வேனும் மோதிய விபத்துக்குள்ளாகியதில், இருவர் படுகாயமடைந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று(17.012026) பிற்பகல் குடாகம சந்தியில் ஏற்பட்டுள்ளது.ஹட்டனில் இருந்து குடாகம நோக்கிச் சென்ற லொறி பிரதான வீதியிலிருந்து இடது பக்கமாக திரும்பி, குறுகிய வீதி ஒன்றுக்கு நுழைய முற்பட்ட போது, டயகம பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற வேன் லொறியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் லொறியும் வேனும் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் ஹட்டன் பொலிஸார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.