உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

உயர்தர மனைப்பொருளியல் செய்முறைப் பரீட்சை ஜனவரி ஆரம்பம்!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
29 பார்வைகள்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான (2025) மனைப்பொருளியல் (Home Economics)பாடத்திற்குரிய செய்முறைப் பரீட்சை தொடர்பில் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவித்தலுக்கமைய, உரிய செய்முறைப் பரீட்சையானது வரும் 2026 ஜனவரி 24 ஆம் திகதி முதல் பெப்ரவரி 02 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அமைக்கப்படவுள்ள 42 பரீட்சை நிலையங்களில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் உரிய பாடசாலைகளின் அதிபர்களுக்கும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறே, அனுமதி அட்டைகள் தபால் மூலம் கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகளுக்கு, 2026 ஜனவரி 19 ஆம் திகதி முதல் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக அனுமதி அட்டைகளைப் பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பரீட்சை தொடர்பான மேலதிக தகவல்களுக்காக, இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொடர்பாடல் ஊடகங்கள் ஊடாக வினவ முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

1911 என்ற இலக்கத்திற்கு அவசர அழைப்பும் 011 2784208 / 011 2784537 எனும் தொலைபேசி இலக்கங்களினுடாகவும் ,தொலைநகல் இலக்கம்: 011 2784422 , gcealexam@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளமுடியும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

46 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

19 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

36 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

44 0 0