உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

உணர்வு பூர்வமாக இடம்பெற்ற கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
19 பார்வைகள்

உணர்வு பூர்வமாக இடம்பெற்ற கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வங்கக் கடலிலேயே காவியமான கேணல்  கிட்டு உட்பட 10 வேங்கைகளின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக் குழுவின் ஏற்ப்பாட்டில் தேராவில் மாவீரர்  துயிலும் இல்ல வளாகத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது 

நேற்றைய தினம்(16.01.2026) காலை வேளையிலே தேராவில் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் அமைந்திருக்கின்ற மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வானது தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவின் தலைவர்  அவர்களது தலைமையில் இடம் பெற்றது 

வங்கக் கடலில் காவியமான கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து மலர் வணக்கம் செலுத்தி அஞ்சலி நிகழ்வு உணர்வு பூர்வமாக இடம்பெற்றது 

குறித்த  நிகழ்வில் வன்னி  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினுடைய தவிசாளர் வேலாயுதம் கரிகாலன் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் குமாரவேலு அகிலன் கரைச்சி பிரதேச சபையினுடைய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணி குழு நிர்வாகத்தினர் பொதுமக்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் 

குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் மரக்கன்றுகளும் தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினரால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

46 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

19 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

36 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

44 0 0