உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

யாழில் எம்.ஜி.ராமச்சந்திரனின் 109 ஆவது பிறந்ததினம் நினைவுகூறல்..!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
24 பார்வைகள்

தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய திரைப்பட உலகின் மூத்த நடிகருமான எம்.ஜி.ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) அவர்களின் 109ஆவது பிறந்ததினம் யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நினைவுகூரப்பட்டது.

யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் குடும்பத்தினரின் ஏற்பாட்டில், யாழ் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ராமச்சந்திரனின் சிலைக்கு முன்பாக இந்த நிகழ்வு நடைபெற்றது.நிகழ்வின் போது, கல்வியங்காடு வர்த்தக சங்க தலைவர் அ. கேதீஸ், எம்.ஜி.ராமச்சந்திரனின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் குடும்பத்தினரால் எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் கோப்பாய் சுந்தரலிங்கம் ஆகியோரின் நினைவாக நெய் விளக்குகள் ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

எம்.ஜி.ராமச்சந்திரனின் நெருங்கிய நண்பரும் தீவிர ரசிகனுமான யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம், கல்வியங்காடு பகுதியில் தனது சொந்த நிதியில் எம்.ஜி.ஆர் சிலையை அமைத்து, ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இயற்கை எய்தியதையடுத்து, அவரது குடும்பத்தினர் தொடர்ந்து இந்நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்து வருகின்றனர்.இந்த நிகழ்வில் உள்ளூர் மக்கள், வர்த்தக சங்க உறுப்பினர்கள் மற்றும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் பலரும் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

46 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

19 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

37 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

44 0 0