உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

தங்க மோசடி வழக்கு ; பொதுமக்களிடம் உதவி கோரிய பொலிஸார்..!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
18 பார்வைகள்

பாரிய அளவிலான தங்க மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் ஒருவர் குறித்த தகவல்களை வழங்குமாறு இலங்கை காவல்துறை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.சந்தேகநபர் குருணாகலைச் சேர்ந்த லொகுபதுருகே மகே விந்தக டி சில்வா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர்,சுமார் மூன்றரைக் கிலோ தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி ஒருவரிடம் 50 மில்லியன் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அதற்குப் பதிலாக தங்க முலாம் பூசப்பட்ட இரும்புத் துண்டுகளைக் கொடுத்து அவர் ஏமாற்றியுள்ளார்.அத்துடன், அவர், தன்னை ஒரு கடற்படை அதிகாரி என்று பொய்யாகக் கூறி, போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முறைப்பாட்டுக்கு அமைய கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட இவர், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இதனையடுத்து மேலும் இருவர் குறித்த சந்தேகநபருக்கு எதிராக முறைப்பாட்டை செய்துள்ளனர்.

இந்தநிலையில் இவரால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது தகவல்களை அறிந்தவர்கள் 011-2395371 அல்லது 071-8594915 என்ற எண்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை கேட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

17 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

36 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

42 0 0
இலங்கை செய்திகள்

மரம் வெட்டிக்கொண்டிருந்த நபருக்கு நேர்ந்த துயரம்.!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவை எல்பட மேற்பிரிவு தோட்டப் பகுதியில் மரம் வெட்டிக்கொண்டிருந்த நபர் மீது பாரிய கிளையொன்று ஒன்று முறிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்ததாக நோர்வூட்…

58 0 0