உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

நீரிழிவு நோயுள்ள தாய்மாருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள அபாய நிலை..!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
26 பார்வைகள்

கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோயை எதிர்கொள்ளும் தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள் பிற்காலத்தில் நீரிழிவு உள்ளிட்ட தொற்றா நோய் உள்ளவர்களாக பிறக்கும் அபாயத்தில் உள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரும், நீரிழிவு மற்றும் நாளமில்லா சுரப்பியியல் ஆலோசகருமான வைத்தியர் மணில்கா சுமனதிலக தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் சுமார் 13.9 சதவீத தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தின் போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. கர்ப்பகால நீரிழிவு நோயானது கர்ப்பத்திற்கு முன்பு அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பது மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் ஏற்படுகிறது.கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோயை எதிர்கொள்ளும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள், பிற்காலத்தில் நீரிழிவு உள்ளிட்ட தொற்றாத நோய்கள் உள்ளவர்களாக பிறக்கும் அபாயத்தில் உள்ளனர்.

அதிக எடை அல்லது பருமனான பெண்கள் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலமும், வழக்கமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதன் மூலமும் கர்ப்பத்திற்கு முன்பு தங்கள் அதிகப்படியான உடல் எடையை சுமார் 7 முதல் 10 சதவீதம் வரை குறைக்க முடிந்தால், இந்த ஆபத்தை கணிசமாகக் குறைக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

17 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

36 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

42 0 0
இலங்கை செய்திகள்

மரம் வெட்டிக்கொண்டிருந்த நபருக்கு நேர்ந்த துயரம்.!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவை எல்பட மேற்பிரிவு தோட்டப் பகுதியில் மரம் வெட்டிக்கொண்டிருந்த நபர் மீது பாரிய கிளையொன்று ஒன்று முறிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்ததாக நோர்வூட்…

56 0 0