உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

அமெரிக்கத் தூதுவர் விடைபெறுவதனால் பாற்சோறு சாப்பிட்டு மகிழ்ந்த உதய கம்மன்பில.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
27 பார்வைகள்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங், நாடு திரும்புவது தொடர்பில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில.

நான்கு வருட கால சாபம் முடிவடைகின்றது எனவும், இது பாற்சோறு சமைத்துக் கொண்டாட வேண்டிய தருணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.கொழும்பில் நெரூர் விசேட ஊடக சந்திப்பை நடத்தியே கம்மன்பில இவ்வாறு கூறினார்.அத்துடன், ஊடக சந்திப்பில் பாற்சோறு சாப்பிட்டு மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்.

ஜூலி சாங், 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவராகச் செயற்பட்டார். சுமார் 4 வருடங்களாக  இராஜதந்திர சேவையின் பின்னர் நேற்று அவர் விடைபெற்றுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் உதய கம்மன்பில அமைச்சராகச்  செயற்பட்டார். அப்போதும் அவர் அமெரிக்கத் தூதுவரைக் கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகளால் அடைய முடியாத இலக்கை அரசியல் ரீதியில் பெற்றுக்கொடுக்க அமெரிக்கத் தூதுவர் முற்படுகின்றார் எனக் கடும் போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகள் குற்றஞ்சாட்டி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

17 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

36 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

42 0 0
இலங்கை செய்திகள்

மரம் வெட்டிக்கொண்டிருந்த நபருக்கு நேர்ந்த துயரம்.!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவை எல்பட மேற்பிரிவு தோட்டப் பகுதியில் மரம் வெட்டிக்கொண்டிருந்த நபர் மீது பாரிய கிளையொன்று ஒன்று முறிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்ததாக நோர்வூட்…

56 0 0