உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது..!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
21 பார்வைகள்

நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் பீடிகளுடன் சந்தேகநபர் ஒருவரை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது.

இதன்போது பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகள் மற்றும் பீடிகளின் மதிப்பு இருபது இலட்சத்திற்கும் அதிகம் என்றும் கூறப்படுகிறது.சந்தேகநபர் (17) இன்று அதிகாலை 12.40 மணிக்கு இந்தியாவின் சென்னையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

சந்தேகநபர் நான்கு சூட்கேஸ்களில், பொம்மைகள், புடவைகள், சட்டைகள் மற்றும் பிற பொருட்களுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டு, 12,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கொண்ட 60 சிகரெட் அட்டைப்பெட்டிகளையும், 23,800 இந்திய பீடிகள் கொண்ட 19 பீடி மூட்டைகளையும் கொண்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் மதுகம, வல்லல்லாவிட்டவையைச் சேர்ந்த 33 வயதுடைய மோட்டார் மெக்கானிக் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சந்தேக நபர் எதிர்வரும் 21 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

17 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

36 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

42 0 0
இலங்கை செய்திகள்

மரம் வெட்டிக்கொண்டிருந்த நபருக்கு நேர்ந்த துயரம்.!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவை எல்பட மேற்பிரிவு தோட்டப் பகுதியில் மரம் வெட்டிக்கொண்டிருந்த நபர் மீது பாரிய கிளையொன்று ஒன்று முறிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்ததாக நோர்வூட்…

56 0 0