உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மட்டக்களப்பில் மதுபானசாலை முகாமையாளரை தாக்கியவர்களில் ஒருவர் கைது.. இருவர் தலைமறைவு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
21 பார்வைகள்

மட்டக்களப்பு – புதூர் பிரதேசத்திலுள்ள மதுபானசாலை முகாமையாளரை தாக்கிய சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இருவர் தலைமறைவாகியுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் ஒருவர் இன்று(16.01.2026) கைது செய்யப்பட்டுள்ளார்.புதூர் பிரதேசத்திலுள்ள மதுபான சாலையில் கடந்த 9ஆம் திகதி இரவு, நான்கு பேரை கொண்ட குழுவினர் மதுபானம் அருந்துவதற்கான சென்றுள்ளனர்.

அருந்திய மதுபானத்துக்கான பணத்தை முகாமையாளர் கேட்ட போது, அவரை அங்குள்ள முகாமையாளர் அறைக்குள் அழைத்து சென்று மதுபானப் போத்தலால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்த சம்பவத்தில் முகாமையாளர் கடுமையாக படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.தாக்குதலை நடத்தியவர்கள்அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இதனை தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்களை பொலிஸார் தேடி வந்த நிலையில், தலைமறைவாகியிருந்த மூவரில் ஒருவர் இன்று(16) கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இருவர் தலைமறைவாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

32 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

41 0 0
இலங்கை செய்திகள்

மரம் வெட்டிக்கொண்டிருந்த நபருக்கு நேர்ந்த துயரம்.!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவை எல்பட மேற்பிரிவு தோட்டப் பகுதியில் மரம் வெட்டிக்கொண்டிருந்த நபர் மீது பாரிய கிளையொன்று ஒன்று முறிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்ததாக நோர்வூட்…

56 0 0
இலங்கை செய்திகள்

அனைவரும் அணிதிரண்டு காணிகளை விடுவிப்பதற்கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும்.!

எம்மத்தியில் காணப்படுகின்ற வேறுபாடுளை களைந்து அனைத்து தரப்பினரும் அணிதிரண்டு காணிகளை விடுவிப்பதற்கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச்…

66 0 0