கெஹெலிய குடும்ப உறுப்பினர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல்.!
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது புதல்வர் ரமித் ரம்புக்வெல்ல உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (16) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
இந்த முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவைத் தவிர ஏனைய பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர். இந்த வழக்கினைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்பதால், வழக்கை முடிவுக்குக் கொண்டுவருமாறு ஆணைக்குழு நீதிமன்றத்திடம் கோரியது. அதற்கமைய, குறித்த வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவர நீதிமன்றம் உத்தரவிட்டது.