உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

ஏழு வயது சிறுமியை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்திய நபர் கைது.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
18 பார்வைகள்

தைப்பொங்கல் தினத்தன்று (15) 7 வயது சிறுமியை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 35 வயது சந்தேகநபர் ஒருவர் நாவலப்பிட்டி பொலிஸாரால் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சிறுமியும் சந்தேகநபரும் நாவலப்பிட்டியில் உள்ள வெஸ்ட்வேர்ல்ட் தோட்டத்தின் ரிலாகல பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

நேற்று (15) மதியம் குடிபோதையில் இருந்த சந்தேகநபர் சிறுமியை அவரது வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அழைத்துச் சென்று சிறுமியை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தி பின்னர் சிறுமிமை அங்கேயே விட்டுச்சென்றுள்ளார்.நீண்ட நேரம் வீட்டில் இல்லாத சிறுமியை பெற்றோர் தோட்டத்தில் வசிக்கும் உறவினர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் உதவியுடன் தேடியுள்ளனர்.

இதன்போது தோட்ட வீட்டின் மேலிருந்து சிறுமி அழும் சத்தம் கேட்டதும், உறவினர்கள் சுமார் 4 மணி நேரத்திற்குப் பிறகு காணாமல்போயிருந்த சிறுமியை கண்டுபிடித்துள்ளனர்.இதனையடுத்து சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையின் போது சிறுமி சந்தேகநபரின் பெயரை வெளிப்படுத்தி நடந்த விபரங்களை கூறியுள்ளார்.

இதன் பின்னர் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில்,சிறுமியின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து சிறுமி வைத்திய பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பேராதனை சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கம்பளை பிரிவுக்கு பொறுப்பான உதவிபொலிஸ் கண்காணிப்பாளர் எச்.எம்.டி. ஹேரத்தின் மேற்பார்வையின் கீழ், நாவலப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, தலைமைக் பொலிஸ் பரிசோதகர் கே.எம். குலதுங்க தீவிரமான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

சிறுமியை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

41 0 0
இலங்கை செய்திகள்

மரம் வெட்டிக்கொண்டிருந்த நபருக்கு நேர்ந்த துயரம்.!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவை எல்பட மேற்பிரிவு தோட்டப் பகுதியில் மரம் வெட்டிக்கொண்டிருந்த நபர் மீது பாரிய கிளையொன்று ஒன்று முறிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்ததாக நோர்வூட்…

55 0 0
இலங்கை செய்திகள்

அனைவரும் அணிதிரண்டு காணிகளை விடுவிப்பதற்கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும்.!

எம்மத்தியில் காணப்படுகின்ற வேறுபாடுளை களைந்து அனைத்து தரப்பினரும் அணிதிரண்டு காணிகளை விடுவிப்பதற்கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச்…

66 0 0
இலங்கை செய்திகள்

கடற்கரையில் கரையொதுங்கிய ச*டலம்.!

காரைநகர் – வேரப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இன்று திங்கட்கிழமை (24) கரையொதுங்கியுள்ளது. கடற்கரைக்கு சென்றவர்கள் சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல்…

28 0 0