உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 3 குற்றப்பத்திரிகை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
22 பார்வைகள்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், கொழும்பு மேல் நீதிமன்றில் 3 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இதனை இன்று(16.01.2026) கொழும்பு நீதவான் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளது.கெஹெலிய ரம்புக்வெல்ல ஊடக, சுகாதார மற்றும் சுற்றாடல் அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், ஊழியர் சிலர்களின் பெயர்களைச் சேர்த்து, அவர்களுக்குரிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொண்டதன் மூலம் அரசுக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால், முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கொழும்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு இன்று(16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை தவிர ஏனைய பிரதிவாதிகள் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், கொழும்பு நீதவான் நீதிமன்றில் உள்ள இந்த வழக்கைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும், இதனை முடிவுக்குக் கொண்டுவருமாறும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நிதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளது.இதனை கருத்தில் கொண்ட நீதவான் வழக்கு தொடர்பான பணிகளை நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

41 0 0
இலங்கை செய்திகள்

மரம் வெட்டிக்கொண்டிருந்த நபருக்கு நேர்ந்த துயரம்.!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவை எல்பட மேற்பிரிவு தோட்டப் பகுதியில் மரம் வெட்டிக்கொண்டிருந்த நபர் மீது பாரிய கிளையொன்று ஒன்று முறிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்ததாக நோர்வூட்…

55 0 0
இலங்கை செய்திகள்

அனைவரும் அணிதிரண்டு காணிகளை விடுவிப்பதற்கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும்.!

எம்மத்தியில் காணப்படுகின்ற வேறுபாடுளை களைந்து அனைத்து தரப்பினரும் அணிதிரண்டு காணிகளை விடுவிப்பதற்கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச்…

66 0 0
இலங்கை செய்திகள்

கடற்கரையில் கரையொதுங்கிய ச*டலம்.!

காரைநகர் – வேரப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இன்று திங்கட்கிழமை (24) கரையொதுங்கியுள்ளது. கடற்கரைக்கு சென்றவர்கள் சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல்…

28 0 0