உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

உந்துருளி திருடர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

கேகாலையில் உந்துருளி திருட்டு மற்றும் தங்கச் சங்கிலி பறித்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வரக்காபொல நீதவான் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை (15) உத்தரவிட்டுள்ளது.

வரக்காபொல பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது மூன்று சந்தேக நபர்கள் புதன்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கிரிஉல்ல மற்றும் தம்பதெனிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் மூவரும் போதைப்பொருள் பாவனைக்குக் அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, சந்தேக நபர்களால் போலி இலக்கத் தகடுகள் பயன்படுத்தப்பட்ட இரண்டு உந்துருளிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், திருடப்பட்ட மற்றுமொரு உந்துருளியும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சந்தேக நபர்கள் வரக்காபொல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனைவரும் அணிதிரண்டு காணிகளை விடுவிப்பதற்கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும்.!

எம்மத்தியில் காணப்படுகின்ற வேறுபாடுளை களைந்து அனைத்து தரப்பினரும் அணிதிரண்டு காணிகளை விடுவிப்பதற்கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச்…

64 0 0
இலங்கை செய்திகள்

கடற்கரையில் கரையொதுங்கிய ச*டலம்.!

காரைநகர் – வேரப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இன்று திங்கட்கிழமை (24) கரையொதுங்கியுள்ளது. கடற்கரைக்கு சென்றவர்கள் சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல்…

28 0 0
இலங்கை செய்திகள்

யாழில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை.!

அரச புலனாய்வுதுறையின் தகவலிற்கமைய வடமராட்சி, துன்னாலை காட்டு பிரதேசத்தில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத மதுபானமான கசிப்பு உற்பத்தி நிலையம் நெல்லியடி பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது. இந்த…

64 0 0
இலங்கை செய்திகள்

காணாமல்போன வைத்தியர் ச*டலமாக மீட்பு.!

காணாமல்போன பதுளை வைத்தியசாலையின் மயக்கவியல் வைத்திய நிபுணரின் சடலம், மஹியங்கனை – மாபாக்கடவெவ பகுதிக்கு அருகில் உள்ள பாறை ஒன்றின் மீது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…

72 0 0