உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

‘மர நிழலில் மகிழ்வுறுவோம்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
22 பார்வைகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவின் ஏற்பாட்டில் மர நிழலில் மகிழ்வுறுவோம் என்ற தொனிப் பொருளில் கல்முனைத் தொகுதி நற்பிட்டிமுனையில் வியாழக்கிழமை(15) இரவு நடைபெற்ற நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

நிகழ்வின் ஆரம்பத்தில் கிராஅத் மௌலவி எச்.எம்.தானீஸ் மேற்கொண்டதுடன் கட்சிக்கீதம் ஒலிக்கப்பட்டது. பின்னர் வரவேற்பு உரையினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரிவுத் தலைவர் எம்.எம். றியாஸ் மேற்கொண்டார்.

தொடர்ந்து அதிதிகள் உரை இடம்பெற்றதுடன் நற்பிட்டிமுனை கிராமத்தின் பிரிவிற்கான இளைஞர் அமைப்பாளர்கள் அறிமுகமும் நியமனம் வழங்கலும் நடைபெற்றது.

இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் அமைப்பாளர் ஐ.எம். உபைத்துல்லாவும் நற்பிட்டிமுனை – 1 எச்.எம்.எம். நிஸ்மி நற்பிட்டிமுனை – 2 ஜே.எம். சாஜஹான் நற்பிட்டிமுனை – 3 ஏ.ஜி.எம். அஜித் நற்பிட்டிமுனை – 4 எச்.எம் .தானீஸ் மௌலவி நற்பிட்டிமுனை – 5 ஏ.எப்.நஸீம் ஆகியோர் நியமனம் பெற்றனர்.

இது தவிர ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைந்து கொண்ட முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எச்.எம் நபாரின் அறிமுக உரையும் இடம்பெற்றது. அடுத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் அமைப்பாளர் ஐ.எம். உபைத்துல்லா உரை, எதிர்வரும் கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டி இடுவதற்கான வேட்பாளராக தெரிவு செய்யப்பட்ட எம்.ஐ.நிரோஸ் உரை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு செயலாளர் ஏ.எஸ்.எம் ஜஃபர் உரை என்பன இடம்பெற்று நிகழ்வ சிறப்பாக நிறைவடைந்தன.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர் உட்பட அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் பொருளாளர் முன்னாள் கல்முனை பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஏறாவூர் நகர சபை தலைவருமான எம். எஸ்.எம்.நளீம் மற்றும் கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனைவரும் அணிதிரண்டு காணிகளை விடுவிப்பதற்கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும்.!

எம்மத்தியில் காணப்படுகின்ற வேறுபாடுளை களைந்து அனைத்து தரப்பினரும் அணிதிரண்டு காணிகளை விடுவிப்பதற்கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச்…

52 0 0
இலங்கை செய்திகள்

கடற்கரையில் கரையொதுங்கிய ச*டலம்.!

காரைநகர் – வேரப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இன்று திங்கட்கிழமை (24) கரையொதுங்கியுள்ளது. கடற்கரைக்கு சென்றவர்கள் சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல்…

24 0 0
இலங்கை செய்திகள்

யாழில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை.!

அரச புலனாய்வுதுறையின் தகவலிற்கமைய வடமராட்சி, துன்னாலை காட்டு பிரதேசத்தில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத மதுபானமான கசிப்பு உற்பத்தி நிலையம் நெல்லியடி பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது. இந்த…

59 0 0
இலங்கை செய்திகள்

காணாமல்போன வைத்தியர் ச*டலமாக மீட்பு.!

காணாமல்போன பதுளை வைத்தியசாலையின் மயக்கவியல் வைத்திய நிபுணரின் சடலம், மஹியங்கனை – மாபாக்கடவெவ பகுதிக்கு அருகில் உள்ள பாறை ஒன்றின் மீது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…

70 0 0