உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

திடீரென ஏற்பட்ட தீப்பரவல்; 10 வீடுகள் தீயில் எரிந்து நாசம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
23 பார்வைகள்

ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேவாஹேட்ட, ரூக்வூட் (Rookwood) கொலம்பியா தோட்டத்தில் இன்று (15) மதியம் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இத் தீ விபத்து காரணமாக அத்தோட்டத்தில் அமைந்துள்ள 10 வீடுகள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. இதனால் வீடுகளில் இருந்த பெறுமதியான பொருட்களும் தீயில் கருகி சேதமடைந்துள்ளன.

இன்று தைப்பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடி வந்த மக்களின் வீடுகளே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளமை அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதேச பொதுமக்கள் ஒன்றிணைந்து கடும் பிரயத்தனத்திற்கு மத்தியில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்குராங்கெத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனைவரும் அணிதிரண்டு காணிகளை விடுவிப்பதற்கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும்.!

எம்மத்தியில் காணப்படுகின்ற வேறுபாடுளை களைந்து அனைத்து தரப்பினரும் அணிதிரண்டு காணிகளை விடுவிப்பதற்கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச்…

50 0 0
இலங்கை செய்திகள்

கடற்கரையில் கரையொதுங்கிய ச*டலம்.!

காரைநகர் – வேரப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இன்று திங்கட்கிழமை (24) கரையொதுங்கியுள்ளது. கடற்கரைக்கு சென்றவர்கள் சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல்…

24 0 0
இலங்கை செய்திகள்

யாழில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை.!

அரச புலனாய்வுதுறையின் தகவலிற்கமைய வடமராட்சி, துன்னாலை காட்டு பிரதேசத்தில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத மதுபானமான கசிப்பு உற்பத்தி நிலையம் நெல்லியடி பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது. இந்த…

59 0 0
இலங்கை செய்திகள்

காணாமல்போன வைத்தியர் ச*டலமாக மீட்பு.!

காணாமல்போன பதுளை வைத்தியசாலையின் மயக்கவியல் வைத்திய நிபுணரின் சடலம், மஹியங்கனை – மாபாக்கடவெவ பகுதிக்கு அருகில் உள்ள பாறை ஒன்றின் மீது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…

70 0 0